The lock of the house near Perambalur was stolen by stealing jewelry and money!
பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் அருகே உள்ள பனங்கூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மனைவி தனலட்சுமி (43), விவசாயி இவர் நேற்றிரவு, தூங்குவதற்காக அருகில் உள்ள தனது மககள் பிரியா வீட்டிற்கு சென்றுவிட்டார். இன்று காலை வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டினுள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 4.5 பவுன் தங்க நகைகள், மற்றும் ரொக்கம் ரூ. 45 ஆயிரத்தை கொள்ளையர்கள் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது,