The lorry – Two Wheeler clash: Two school students killed on the spot near in Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியில் இருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்தில், சம்பவ இடத்திலேயே டூவீலரில் வந்த இரு பள்ளி மாணவர்கள் பரிதாபக உடல்நசுங்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிச்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில்,
விபத்தில் உயிரிழந்தவர்கள் செட்டிகுளத்தை சேர்ந்த ஏழுமலை (18), மற்றும் அழுந்தலைப்பூர் கிராமத்தை சேர்ந்த கீர்த்திராஜன் (16), ஆகியோர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மாணவர்கள் இருவரும் பாடாலூரில் உள்ள அன்னை மேல்நிலைப்பள்ளியில், விடுதியில் தங்கி 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர் என தெரிய வந்துள்ளது. உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.