The magistrate who conducted the pujas with the corpse, extended his jail to two including his wife ||
சடலத்தை வைத்து பூஜை நடத்திய மந்திரவாதி மற்றும் காதல் மனைவிக்கு காவல் நீட்டிப்பு

பெரம்பலூரில் இளம் பெண்ணின் சடலத்தை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி மற்றும் அவரது காதல் மனைவிக்கு வரும் மே 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் கல்யாண் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கடந்த சில ஆண்டுகளாக மாந்திரீகம் செய்வது, அதுதொடர்பாக பயிற்சி அளிப்பது போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார். பெரம்பலூர் கீத்துக்கடை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்த கார்த்திகேயன், இரண்டு ஆண்டு முன்னர்அங்கிருந்து மருதடி கிராமத்தின் மலையடி வாரப்பகுதியில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிரமம் அமைத்து, மனிதமூளை, மண்டை ஓடுகள், பன்றி தலை போன்றபொருட்களை வைத்து பூஜை செய்து வந்தார்.

இதனையறிந்த அந்த பகுதி பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, கார்த்திகேயன் உள்ளிட்ட சிலரை போலீசார்கைது செய்து சிறையிலடைத்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியேவந்த கார்த்திகேயன், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எம்.எம். நகரில் ஒரு மாடி வீட்டை ரூ. 20 ஆயிரத்திற்கு வாடகைக்கு எடுத்து, அங்கு மீண்டும் மாந்திரீகம் செய்து வந்துள்ளார்.

இந்த மாந்திரீகத்திற்காக அவர் இறந்த இளம் பெண்ணின் சடலத்தை வைத்து, பூஜை செய்வதாகவும்,பொதுமக்களுக்குஅச்சுறுத்தலாக செயல்படுவதாகவும், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ராமதாஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில்,பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்திரா தலைமையிலான போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து, சோதனை நடத்தினர்.

அப்போது, இறந்த இளம்பெண்ணின் அழுகிய உடல், ஏராளமான மனித மண்டைஓடுகள், கடற்குதிரைகள் உள்ளிட்டவை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி நசீமாஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில், கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அபிராமி(20) என்ற இளம்பெண்ணின்சடலத்தை அவரின் உறவினர்கள் 19 ம்தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு பிறகு மயிலாப்பூர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

அதனை இடுகாட்டு ஊழியர்கள் மைலாப்பூரை சேர்ந்த தன்ராஜ்(34), கார்த்திக்(27) ஆகியோர் ரூ.20 ஆயிரம் கொடுத்து , தனது நண்பர்களான சென்னை ஈச்சம்பாக்கத்தை சேர்ந்த வினோத்குமார்(35), அடையாரை சேர்ந்த சதீஷ் (28) ஆகியோர் மூலம் சடலத்தை இடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து வந்தது தெரியவந்தது.

மேலும் மனித மண்டை ஒடுகள் அனைத்தும், திருச்சி ஓயாமாரி சுடுகாட்டில் உள்ள ஊழியர்களிடம்தலா ரூ.200 கொடுத்து வாங்கியதும், அதே போல ஆஸ்துமா நோயை குணப்படுத்த வெளிமாநிலங்களில்கடல்குதரைகள்வாங்கியதாகவும் கார்த்திகேயன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

கார்த்திகேயன், நசீமா மற்றும் சென்னையை சேர்ந்த வினோத்குமார், சதீஷ், தன்ராஜ், கார்த்திக் ஆகிய நான்கு பேரையும் கைது செய்துதிருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் கார்த்திகேயன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெண்ணின்சடலம் மறு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது

போலீசார், கடல்அட்டைகள், சொகுசு கார், மண்டை ஓடுகள், சுவாமி சிலைகள், மாந்திரிகத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த பல வாரங்களுக்கு முன்பு மருதடியில் உள்ள கார்த்திகேயனின் ஆசிரமம் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மர்மமான முறையில் தீப்பற்றி ஏரிந்து சாம்பலானது.

மந்திரவாதி கார்த்திகேயன் மற்றும் அவரதுமனைவி நசீமா ஆகியோரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததையடுத்து, இன்று மீண்டும், பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களுக்கு வரும் மே. 19 ம்தேதி தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்து மாஜிஸ்திரேட் சுஜாதா உத்தரவிட்டார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!