The mahamarayamman temple kumbabhishekam took place at Perumathur.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள பெருமத்தூரில் பழமை வாய்ந்த அருள்மிகு மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் மகாமண்டபம் புதுப்பிக்கப்பட்டு, செல்வவிநாயகர், பாலமுருகன், காத்தவராயர் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவில்கள், புதுப்பிக்கப்பட்டு அழகிய கோபுரம் கட்டப்பட்டது.
இந்தகோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனையொட்டிகோயில் முன் வாயில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு அதில் செல்வவிநாயகர், அருள்மிகு பாலமுருகன், அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோவில் நவக்கிரகங்களுக்கு யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு மலர்களால் அலங்கரிப்பட்டு இருந்தது.
இதில் விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, அங்குரார்பணம், ரக்ஞாபந்தனம், சூரிய பூஜை, விநாயகர், மாரியம்மன் சகஸ்ர நாம பூஜைகள்செய்யப்பட்டன. தொடர்ந்து அனைத்து கலசங்களும் புனிதநீருடன் வைக்கப்பட்டு 3ம் கால யாக பூஜைகள் நடந்தன. பின் யாகசாலை பூஜையில் இருந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை சுமந்து, வெடி மேளதாளங்களுடன் கோயிலை வலமாக வந்தனர்.
தொடர்ந்து விமான கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டடு கும்பாபிஷேகம் நடைபெற்றுது. குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது மஞ்சள் கலந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து செல்வ விநாயகர், அருள்மிகு பாலமுருகன் அருள்மிகு மகாசர்வசக்தி மாரியம்மன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
பக்தர்கள் அனைவருக்கும் குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புளியோதரை, சர்க்கரை பொங்கல் பிரசாதங்கள் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டன. ராஜா சிவாச்சாரியார் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் குழு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தது.
இரவு விசேஷ அலங்கராத்துடன் வெடி, மேளதாளங்கள் முழங்க மகாமாரியம்மன் திருவீதி உலா, கரகாட்டம் நடைபெற்றது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை பெருமத்தூர் துபாய் வாழ் வன்னிய இளைஞர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.