The man who kills the car, cross the road to drink a tea near in Perambalur பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் கிராமத்தில் டீ குடிக்க சாலையை கடக்க முயன்றவர் கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், சேடப்பட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் செல்வராஜ் (வயது 45), கல் உடைக்கும் தொழிலாளி இவர் பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் தண்ணீர் பந்தலில் வசிக்கும் சகோதரி பழனியம்மாள் வீட்டிற்கு நேற்று வந்திருந்தார். இன்று அதிகாலை காலை டீ குடிப்பதற்காக கடைக்கு வந்துள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி பார்த்தனர். அவர் சாலையின் ஓரம் சடலமாக இருப்பது தெரியவந்தது. பின்னர், வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர், நடததிய விசாரணையில், செல்வராஜ், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி நோக்கி (ஆம்னி) கார் செல்வராஜ் மீது மோதியது. இதில் செல்வராஜ் உயிரிழந்ததும் தெரிய வந்தது. மோதிய ஆம்னி டிரைவர் சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்த உசேன்கான் மகன் பஷீர்கானை கைது செய்த போலீசார் மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!