The manager was mysteriously found dead in a car near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்தவர் நல்லசாமி (40).இவர் பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் உள்ள தனியார் டிராக்டர் விற்பனை கம்பெனியில் விற்பனை மேனேஜராக பணிபுரிந்து வந்தார். அவரின் மனைவி இறந்துவிட்டார். 2 மகன்கள் உள்ள நிலையில், நல்லசாமி கீழப்புலியூர் பகுதியில் காரில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இது குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்று போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நல்லசாமி மது குடிப்பதற்காக கடையில் கிளாஸ், கூல்டிரிங்ஸ் வாங்கிச்சென்ற நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து காரில் கிடந்த நல்லசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் அப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.