The Marxist Party Struggle in Perambalur – Ariyalur districts demanding fulfillment of demands

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம்:

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் அhpயலூர் மாவட்டக் குழு கூட்டம் பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அழகர்சாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

என்.செல்லதுரை, பி.ரமேஷ், எ.கலையரசி, எஸ்.அகஸ்டின், உளபட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 3,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தி கிடப்பில் போடப்பட்டுள்ளது உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும், மேலும் நிலத்தின் பேரில் கடன் வாங்க முயற்சிப்பதை தடை செய்ய வேண்டும்.

அரசு மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெயங்கொண்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலக்கரி மின்திட்டத்தை உடனடியாக துவக்க வேண்டும், அப்படி இல்லாவிட்டால் கையகப்டுத்தி நிலங்களை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. உடனடியாக தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு போதிய மானியத்தை வழங்கி தமிழக அரசு நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டும், பெரம்பலூர் அருகே எறையூரில் உள்ள அரசு பொதுத் துறை சர்க்கரை ஆலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள இணை மின்சாரதிட்டத்தை நடப்பு ஆண்டிலேயே இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி பேரூராட்சி பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!