The Milk Producers Association decided to protest to raise the purchase price of milk by Rs.10 per liter.

பாலுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு பத்து ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி ஆவின் அலுவலகம் முன்பாக கறவை மாடுகளுடன் 3 நாள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் முகமது அலி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் நடைபெற்றது, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் முகமது அலி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாட்டு தீவனத்தின் விலை உயர்வு, தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் விலையை உயர்த்தி கொள்முதல் செய்து வருவது உள்ளிட்ட பல காரணங்களால் அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு பால் விற்பனை செய்யும் பால் உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளதை கருத்தில் கொண்டு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது‌.

இக்கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் முகமது அலி தெரிவிரித்ததாவது:

பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், பசும்பால் மற்றும் எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு பத்து ரூபாய் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் விற்பனை நிறுவனங்கள் ஒரு லிட்டருக்கு 50 முதல் 60 ரூபாய் வரை கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர், ஆனால் ஆவின் நிர்வாகம் ஒரு லிட்டருக்கு 35 ரூபாய் மட்டுமே கொள்முதல் செய்கின்றனர், ஆகையால் பால் உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுக்கக்கூடிய தனியார் நிறுவனத்திற்கு பால் கொடுத்து வருகின்றனர், ஏற்கனவே ஆவின் நிறுவனத்தில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து 25 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனர், இதனால், ஆவின் நிர்வாகம் கூடுதல் விலை கொடுக்காமல் விட்டு விட்டால் தற்பொழுதுஆவினுக்கு பால் கொடுத்து வரும் விவசாயிகளும் பால் கொடுக்காமல் நிறுத்தி விடுவார்கள், இதனால் ஆவின் நிர்வாகம் அழிந்து விடும் நிலை உருவாகும் எனவே, பால் கொள்முதல் விலை உத்தரவாதம் இல்லாமல் போய்விடும்.

ஆவின் அழிந்து விட்டால் தனியார் விலை குறைப்பு செய்து அடிமாட்டு விலைக்கு பால் கொள்முதல் விலையை குறைத்து விடுவார்கள், எனவே இந்த கோரிக்கையை முன்வைத்து வரும் அக்டோபர் மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆவின் அலுவலகம் முன்பாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் கரவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசிற்கு கவனத்தைகொண்டு செல்ல உள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக அரசுக்கும் அலுவலர்களுக்கும் மனு கொடுத்து பேசவுள்ளதாகவும் தெரிவித்த அவர் இதற்கும் அரசு செவிசாய்க்க வில்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர் சங்கங்களுடன் சேர்ந்து பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், ஆகவே தமிழக அரசு உடனடியாக பால் உற்பத்தியாளர் நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும் மற்றும் இதர கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என கேட்டுக் கொண்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!