The MLA praises the gold-winning student of Asian-scale weight lifting

நாமக்கல் மாவட்டம் அக்கியம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவ கமலி ஆசிய அளவிலான பளுதூக்கும்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றதைப் பாராட்டி சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் அவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார்.

ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த மாணவிக்கு சேந்தமங்கலம் எம்எல்ஏ ரூ. 25,000 நிதி உதவி வழங்கிப் பாராட்டினார்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டியைச் சேர்ந்த காளியப்பன், கலைச்செல்வி தம்பதியரின் மகள் கமலி. இவர், எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

பளு தூக்கும் வீராங்கனையான இவர், கடந்த 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் நடைபெற்ற ஆசிய அளவிலான பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றார்.

இதில் 47 கிலோ எடைப் பிரிவில் கிளின், ஜெர்க் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற கமலி 350 கிலோ எடை தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

சாதனை படைத்த கமலியை சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் அக்கியம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்தினார். மேலும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25,000 உதவித்தொகை வழங்கினார்.

அப்போது கமலி, தனக்கு அரசு வீடு வழங்கவும், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனைத்து உதவிகளையும் அரசு மூலம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது எம்எல்ஏ சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு சென்று இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார்.

சேந்தமங்கலம் பேரூராட்சி செயலர் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி செயலர் சந்திரசேகரன், அக்கியம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!