The motor cycle carriage ceremony for the working women in Perambalur was awarded to 100 people.
100 நபர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா வழங்கினார்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ‘பணிபுரியும் மகளிருக்கு 50 சதவீத மானிய விலையில் இரு சக்கரம் வழங்கும் திட்டத்தின் கீழ்’ பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 100 பணிபுரியும் மகளிருக்கு தலா ரூ.25 ஆயிரம்- வீதம் ரூ.25 லட்சம் மானிய விலையிலான அம்மா இரு சக்கர வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.மருதராஜா(பெரம்பலூர்), மா.சந்திரகாசி (சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.ராமச்சந்திரன் (குன்னம்) ஆகியோர்களது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, இன்று பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.