The mysterious death of a young woman near Perambalur: The body found in the well recovery: Police Investigation
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிணற்றில் மிதந்ததால் பெரும் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது. குரும்பலூரை சேர்ந்த முத்துசாமி என்பவர் வழக்கம் போல் வயலுக்கு சென்றுள்ளார்.
அப்போது கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் எட்டிப்பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் இளம்பெண்ணின் சடலம் மிதந்து கொண்டிருந்தது. இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தியதில், பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் புதுக்காலனி கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலின் 3வது மகளான ஐஸ்வர்யா (வயது 20 என்பதும், பத்தாம் வகுப்பு முடித்து விட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் என்பதும், கடந்த ஞாயிறு அன்று வீட்டிற்கு வந்த ஐஸ்வர்யா கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனதால் தீவிரமாக தேடி வந்தனர் என்பது தெரிய வந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இளம்பெண் ஐஸ்வர்யா எப்படி இறந்தார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.