The Namakkal Collector Asia Mariam request to Provide Fund Generous for Military Soldiers Flag Day
நாமக்கல் ஆட்சியர் ஆசியா மரியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை கடும் பனிப்பொழிவிலும், மிக அதிகமான குளிரிலும் பாலை வனப்பகுதியில் காணும் கடும் வெப்பத்திலும் தனது சுயநிலத்தைப் பாராதும், இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் பகுதிகளில் இரவு பகல் பாராதும் நாட்டினைக் காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் நாள் படைவீரர் கொடி நாளாக நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.
கொடிநாள் அன்று வசூலிக்கப்படும் தொகை முன்னாள் படைவீரர்களின் நலன்களை பேணிக்காக்கவும் முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
எனவே தியாக சுடர்களாக விளங்கும் முப்படை வீரர்களின் நலன்காக்க, படைவீரர் கொடி நாளை முன்னிட்டு திரட்டப்படும் கொடிநாள் நிதிக்கு தராளமாக நிதி வழங்கிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.