The Namakkal Collector is invited to the national level competition students for Nutritious food

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு:

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தால், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, இந்தியா முழுமைக்கும் நடத்தப்படும் தேசிய அளவிலான, சரியான, சத்தான சரிவிகித உணவு என்னும் மையக் கருத்தினைக் கொண்டு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் நுகர்வோர்கள் பங்கு பெறும் வகையில், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு தொடர்பாக ஓவியம், சுவரோவியம், டிஜிட்டல் கலை போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நடத்தப்பட உள்ளன.

இதில் முதல் கட்டமாக மேற்கண்ட போட்டிகளை பள்ளி அளவில் நடத்த விரும்பும் பள்ளிகள் அனைத்தும், எப்எஸ்எஸ்எஸ்ஏஐ.ஜிஓவி.இன் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படும் போஸ்டர்கள் தேசிய அளவிலான தேர்வுக்கு அனுப்பப்படும். எனவே, ஆரோக்கியமான இந்தியாவினை உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இந்த போட்டிகளில் மாணவ, மாணவியர் தத்தம் பள்ளிகளின் மூலம் தங்களது பெயரினை பதிவு செய்து கலந்து கொள்ளலாம். டிஜிட்டல் போட்டிக்கு பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி, கல்லூரி மாணவ, மாணவியரும் பங்கு பெறலாம்.

போட்டிகளில் பங்கு பெறுவதன் மூலம் மாணவ, மாணவிகளின் தனித்திறன் மேம்படுவதுடன், உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்பட்டு, மாணவ, மாணவிகளின் ஆரோக்கியம் மேம்பாட்டு, தங்கள் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கும் உதவிகரமாக அமையும்.

எனவே, போட்டிகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியரை பங்கேற்க உற்சாகப்படுத்தி பள்ளி ஆசிரிய பெருமக்கள், பெற்றோர் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதரவு நல்கிட வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தை தொலைபேசி எண்.04286-281242 மூலம் அனுகலாம், என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!