The new health insurance scheme for civil servants: Sep get the ID card. 20 Apply within

insurance பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுப்பணியாளர்களும் Web Pay Roll வுடன் தங்களின் ஆதாh; எண்ணை இணைத்து, 100 சதவிகிதம் Web Pay Roll வுடன் ஆதார் எண் இணைப்பு என்ற இலக்கை பெரம்பலூர் மாவட்டம் பெற்றுள்ளது.

மேலும், அரசு ஊழியர்களுக்கான 2016 புதிய மருத்துவ காப்பீட்டுத்திட்டத்திற்கான புதிய அடையாள அட்டை வழங்குவதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. இது குறித்தான விளக்கங்கள் அனைத்து பணம் பெறும் அலுவலர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு ஊழியர்களும் பணம் பெற்றளிக்கும் அலுவலர்களிடம் அளிக்கப்பட்டுள்ள புதிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து 20.09.2016க்குள் அளிக்க வேண்டும்.

இதுபோல், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்களில் ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியதாரர்களில் இன்னும் ஆதார் எண் அளிக்காத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உடனடியாக ஆதார் எண்ணை பெரம்பலூர் மாவட்ட கருவூலம் அல்லது அவர்கள் ஓய்வூதியம் பெற்றுவரும் சார் கருவூலங்களில் அளித்து ஜுவன் பிரம்மான் போர்டலில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

மேலும், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ளள பொதுத் துறை வங்கிகளில் நேரிடையாக Public Sector Banks (PSB) ல் ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் தங்களின் ஆதார் எண்ணை ஓய்வூதிய கணக்குடன் அந்தந்த வங்கியில் இணைக்க வேண்டும்.

ஆதார் புகைப்படம் எடுக்காத ஓய்வூதியதாரர்கள் உரிய அடையாள அட்டைகளுடன் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்களை அணுகி எடுத்துக்கொள்ளலாம்.

புதிய மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை அட்டையினை பெறாத ஓய்வூதியதாரர்கள் மாவட்ட கருவூலம் மற்றும் சார்கருவூலங்களுக்கு சென்று வரப்பெற்றுள்ள அடையாள அட்டையினை பெற்றும் பயன்பெறலாம், என அரசு தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!