The opening ceremony of the Sree fertily center at Perambalur: Actors Mahima Nambiar and Jivaravikumar are participating.
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் மருத்துவ சேவை செய்து வரும் எம்.டி.ஆர் மருத்துவமனையின் மற்றொரு அங்கமாக உலக தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் ஸ்ரீகருத்தரித்தல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ள, இதன் திறப்பு விழா நாளை மறுநாள் காலை 9 மணியளவில் நடக்கிறது. இதில் மருத்துவர் எம்.தங்கராஜ், ரூபிராஜேஸ்வரி, மருத்துவர்கள் டி.கிருபாகரன், எஸ்.ஸ்ரீதேவிகிருபாகரன், மேலகல்கண்டார்கோட்டை முன்னாள் தலைவர் பி.சண்முகம், டி.கே.ஸ். மெடிக்கல் வீ.செந்தில்நாதன், எஸ்.புவனேஸ்வரி உள்ளிட்டவர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவை நடிகை மஹிமா நம்பியாரும், மருத்துவர் ஸ்ரீதேவிகிருபாகரனும், நடிகர் ஜீவாரவிக்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கின்றனர். மேலும், இவ்விழாவில் வண்ணத்திரை, சின்னத்திரை பிரபலங்களும், உள்ளூர், வெளியூர் முக்கிய பிரமுகர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளனர்.