The Parkavakula Sangam has petitioned the SP to take action against the YouTube channel of the person who spread the wrong information about Perambalur MP Parivendar!

கடந்த 01.10.2022 அன்று ஆதன் யூடியூப் சேனலில், நெறியாளர் மாதேஷ் முன்னிலையில் பாண்டியன் என்பவர் அளித்த பேட்டியில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான டி.ஆர்.பாரிவேந்தர் பற்றி தவறான கருத்துக்களை பரப்பும் விதமாகவும் , அவரது பேருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும், சமூக ஒற்றுமையை கெடுக்கும் வகையிலும் பல்வேறான கருத்துக்களை தெரிவித்து இருந்தாகவும், அது, முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகவும் சமூக அமைதியை சீர்கெடுக்கும் வகையிலும் உள்ளது என்றும், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீதும், தவறான தகவலை தெரிவித்த பாண்டியன் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, பெரம்பலூர் பார்க்கவ குல முன்னேற்ற சங்கம் சார்பில், பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர்.

பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் பி.அன்புதுரை, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் பி.காமராஜ், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆலத்தூர் ஒன்றிய தலைவர் சு.சுகுமார், வேப்பந்தட்டை ஒன்றிய தலைவர் மருதுமுத்து, வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் செல்வராசு, வேப்பந்தட்டை ஒன்றிய பொருளாளர் கதிரேசன், ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆர்.ரஞ்சித் உள்ளிட்ட பலர் சென்றிருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!