The parties to form the government in Karnataka, Tamil Nadu is legally required to provide water to kavari: GK Vasan
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள கட்சிகள் சட்டத்தை மதித்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்..
ஈரோடு மாவட்டம் காளிங்கராயன்பாளையத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள காளிங்கராயன் மணிமண்டபத்திற்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன்., அவரின் திருவுருவ சிலைக்கு நேற்றிரவு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,கர்நாடகாவில் ஜனநாயக ரீதியாக ஆட்சி அமைக்க முடியாத கட்சியை அகற்றி கூட்டணி ஆட்சி அமைகிறது.
புதியதாக பொறுப்பேற்க உள்ள அரசு கூட்டாட்சி தத்துவத்தின்படி சட்டத்தை மதித்து தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை காலம்தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்றார். ஏற்கனவே அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும, பாரதிய ஜனதாவும் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வந்த நிலையில் இனியாவது தேசிய கட்சிகள் ஜனநாய ரீதியாக நடக்க வேண்டும் என தெரிவித்தார்.