பெரம்பலூர் : மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூர்தியர்கள் அனைவரும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2016 முதல் ஜுன் மாதம் 2016 வரை நேர்காணலுக்கு வேலை நாட்களில் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேர்காணலுக்கு வருகை தரும்போது ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது (1) ஓய்வூதியப்புத்தகம் மற்றும் (2) நடைமுறையில் உள்ள சேமிப்பு கணக்கு எண் வங்கி பற்று வரவு புத்தகம் (3) வருமான வரி கணக்கு எண் (4) குடும்ப அடையாள அட்டை (5) ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் மேற்குறிப்பிட்ட 5 ஆவணங்களுடன் மறுமணம் புரியா சான்றுடனும் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்குறிப்பிட்ட 5 ஆவணங்களின் நகல்களுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓய்வூதிய வங்கி கணக்கு உள்ள கிளை மேலாளர் (அல்லது) அரசிதழ் பதிவுபெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் (அல்லது) வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். நேரில் வர இயலாத குடும்ப ஓய்வூதியர்கள் மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் மறுமணம் புரியாச் சான்றும் அளிக்க வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள மாஜிஸ்டிரெட், நோட்டரி, வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச் சான்று பெற்று சம்மந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி(இருப்பின்) ஆகிய விபரங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஓய்வூதியர்கள் ஏப்ரல் மாதம் 2016 முதல் ஜீன் மாதம் 2016 முடிய நேர்காணலுக்கு வரத் தவறினாலோ அல்லது சான்றொப்பம் செய்யப்பட்ட வாழ்வுச் சான்றினை அனுப்பத் தவறினாலோ ஓய்வுதியர்களின் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதம் 2016 முதல் நிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சான்றுகளுக்கான மாதிரிப்படிவத்தை http://www.tn.govt.in/karuvoolam, என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் நேர்காணல் செய்ய விரும்புவோர் கருவூலத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்து அதன் பிறகு ஜீவன் பிரமான் இணையதளத்தில பதிவு செய்து கொள்ளவும். அதன் பிறகு ஜீவன் பிரமான் என்ற இணையதளத்தில் ஓய்வூதிய பதிவு செய்தமைக்கான அத்தாட்சி பெற வேண்டும்.
இதுவரை ஓய்வுதியர் புதிய ஓய்வூதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் விண்ணப்பம் அளிக்காதவர்கள் கருவூலத்தில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுத்துறை வங்கிகளின் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், தமிழ்நாடு மின்வாரியம், இரயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
என மாவட்ட கருவூல அலுவலர் தெரிவித்துள்ளார்.