The Perambalur Fire Service Department is calling to show if a rescue device has been found from the deep Bore well

Model

பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் தாமோதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தை யரேரனும், ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கும் கருவிகளை கண்டுபிடித்திருந்தால், அதனை பெரம்பலூரில் உள்ள கோட்ட தீயணைப்பு துறை அலுவலகத்திற்க்கு கொண்டுவந்து காண்பித்து மக்கள் பயன்பெறும் வகையில் இருக்க தீயணைப்புதுறை சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் கடந்த நாட்களில், பயன்பாடற்ற ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவன் சுஜித் விழுந்து பலியானான். இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது . இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க புதிய கருவிகள் கண்டுபிடிக்க அனைத்து கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்தார் .

அதன் பேரில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடி கிராமத்தை சேர்ந்த வாலிபர் அய்யாபிள்ளை என்பவர் புதிய கருவியை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டார். தீயணைப்புத்துறை திருச்சி மண்டலதுணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் வழிகாட்டுதலின்படி சென்னை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை இயக்குனரகத்தில் துறையின் இயக்குனர் சைலேந்திரபாபுவை அய்யாபிள்ளை நேரில் சந்தித்தார். பின்னர் தான் கண்டுபிடித்த புதிய கருவியின் செயல்பாடு குறித்து தீயணைப்புத்துறை இயக்குநர் முன்னிலையில் விளக்கம் அளித்தார் . மேலும் திட்டஅறிக்கையையும் சமர்ப்பித்தார்.

இதை பார்த்த தீயணைப்புதுறை இயக்குனர் அய்யாபிள்ளையை பாராட்டியதுடன் அந்த கருவியை மேம்படுத்த ஊக்கமும் ஆலோசனையும் வழங்கினார்.

இதே போல், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த எவரேனும் ஆழ்துழை கிணற்றில் மீட்கும் கருவி கண்டுபிடித்தால் அதை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலகத்திற்க்கு கொண்டுவந்து காண்பித்து பயனுற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!