The perambalur municipality decided to declare that there was no open defecation!

பெரம்பலூர் நகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடம் பயன்படுத்துவதில்லை என்று அறிவிப்பு செய்யும் வகையில் அனைத்து பொதுமக்களும் 100 சதவீதம் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர் – ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் ஏதுமிருப்பின் 15 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் – நகராட்சி சார்பில் தகவல் விடுக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் காலரா போன்ற கொடிய தொற்றுநோய் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, அதனை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் மலம் கழிப்பதை மத்திய அரசு மற்றும் மாநில அரசும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் தங்களது வீடுகளிலும், பொது கழிப்பிடங்களிலும் 100 சதவீதம் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்நகராட்சியில் அமைந்துள்ள அனைத்து பள்ளி மாணவர்களிடம் அவர்கள் படிக்கும் பள்ளிகள் மற்றும் வீடுகளிலும் கழிப்பறையைத்தான் பயன்படுத்தி வருகின்றோம் என்ற உறுதிமொழி பெறப்பட்டுள்ளது.

நகராட்சிப்பகுதிகளில் இயங்கி வரும் சுய உதவிக்குழுக்கள் மூலம் அவர்களது பகுதியில் வசிக்கும் அனைத்து பொதுமக்கள் கழிப்பறைகளைத்தான் பயன்படுத்தி வருகின்றோம் என்ற உறுதி மொழி கடிதங்கள் பெறப்பட்டு வருகிறது.

மேலும், பெரம்பலூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் 100 சதவீத பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவது இல்லை என நகராட்சி சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதால், பொதுமக்கள் இது தொடர்பான ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகள் ஏதுமிருப்பின் 15 நாட்களுக்குள் நகராட்சி அலுவலகத்தில நேரிலோ, கடிதம் மூலமாகவோ அல்லது (Commr.perambalur@tn.gov.in ) என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!