The Perambalur police recovered the missing money and property and handed it over to the rightful owner! Public praise!!
திருச்சியில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு இன்று அதிகாலை 12.30 மணியளவில் வந்தது. அதில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முதியவர் சென்னை சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, இயற்கை உபாதையை கழிக்க சென்று விட்டு திரும்ப வந்து பார்க்கும் போது, அவர் வந்த பேருந்து காணவில்லை. இது குறித்து அவர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில்,
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பெரியசாமி உரிய பேருந்தை விசாரித்து, அந்த பேருந்தினை திருமாந்துறை டோல் பிளாசாவில் நிறுத்தி மேற்படி முதியவரின் பணப்பை மற்றும் உடைமைகளை மீட்க, மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண்-1-ல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயராமன் தலைமை காவலர் சக்திவேல் மற்றும் முதல்நிலை காவலர் அரவிந்தன் ஆகியோர்கள் பணியில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
முதியவர் சென்ற பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில், முதியவரின் உடைமைகள் அடங்கிய பையை மீட்டனர். பின்னர் அந்த முதியவரை திருமாந்துறை டோல்பிளாசா வரவழைத்து அவரது உடைகள் மற்றும் அதிலிருந்த பணம் ரூபாய் 1,35,000/- ஒப்படைத்ததோடு மீண்டும் அவரை சென்னை செல்வதற்கு மற்றொரு பேருந்தில் ஏற்றி விட்டனர்.
துரிதமாக செயல்பட்ட போலீசாரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.