The person who went to the hospital near Perambalur after being treated by a bus died!

பெரம்பலூர் அருகே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றவர் பஸ்சில் திரும்பி செல்லும் போது உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம், பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர், பழனி மகன் சின்னசாமி (60), இன்று உடல்நிலை சரியில்லாததால் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதாக கூறி பாண்டகபாடியில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து புறநோயளியாக சிகிச்சை பெற்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்ல வேண்டி 10.10 மணிக்கு புதிய பேருந்தில் இருந்து கிளம்பிய அரசுப் டவுன் பஸ்சில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தபோது வாந்தி, மயக்கம் வருவதாக கூறினார். பேருந்தை நடத்துனர், ஓட்டுனர் நிறுத்தியுள்ளனர். பின் படிக்கட்டில் அமர்ந்து வாந்தி எடுத்தவர் உடன் மயக்கமடைந்தார்.

சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்து போது அவபர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி சென்று விட்டனர். இது குறித்து, டிரைவர் சந்திரசேகரன், கணடக்டர் செல்வராஜ் தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் எஸ்.எஸ்.ஐ சங்கர் தலைமையில் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சின்னசாமியின் மனைவி ராஜாமணி, மகன் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் உடலை ஒப்படைத்தனர். இச்சம்பவம் இன்று அப்பகுதில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!