The petitioner to the Kollampatti People’s Authority to shift garbage from the composting site

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கொல்லம்பட்டி பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கொல்லம்பட்டி பகுதியில் கடந்த 30 வருடங்களாக வசித்து வருகிறோம். இப்பகுதியில் மொத்தம் 3 ஆயிரத்து 500 வீடுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகிறோம். தற்போது இப்பகுதியின் மையப்பகுதியில் சிறுவர் விளையாட்டு திடல் என ஒதுக்கப்பட்ட இடத்தில் குப்பைகளை அரைத்து மறுசுழற்சி செய்து உரமாக்கும் பணிகளை செய்து வருகின்றனர்.

மக்களின் விருப்பங்களையும், கருத்துக்களையும் கேட்டறியாமல் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வருகிறது. இப்பகுதியில் வசித்து வரும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் முதியவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள் ஆவார்கள். எனவே இப்பணிகளை இப்பணிகளை இவ்விடத்தில் தொடராமல் மாற்று இடத்தில் அமைத்துதர திருச்செங்கோடு நகராட்சிக்கு ஆவண செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!