குரும்பலூர் பேருந்து நிறுத்தத்தில் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப் படக் கண்காட்சி செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் இக்கண்காட்சியில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப் படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினாகள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இப்புகைப் படக் கண்காட்சியை குரும்பலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சார்ந்த 500 ற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.
குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வமுடன் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகைப்படங்களில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து திட்டங்கள் குறித்தும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக ஊழியர்கள் மூலம் கேட்டறிந்தனர்.
இக்கண்காட்சி, தமிழக முதலமைச்சர் அவா;களின் தலைமையிலான அரசின் சாதனைகளை, பல்வேறு வகையான நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளுவதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக இக்கண்காட்சியை பார்வையிட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.