The poetry, essay and speech of the Perambalur district secondary school students
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு :
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வரும் 06.10.2017 அன்று காலை 9 மணிக்குப் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரை அணுகி விண்ணப்பத்தைப் பெற்று நிறைவு செய்து தலைமையாசிரியரின் ஒப்பம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குக் காலை 9 மணிக்கு வருகை தந்து போட்டியில் கலந்து கொள்வதற்கான வருகைப் பதிவேட்டில் ஒப்பமிடவேண்டும்.
ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெறும் பள்ளி மாணவா;களுக்கு முதற்பரிசாக ரூபாய் 10,000-மும், இரண்டாம் பரிசாக ரூபாய் 7000-மும், மூன்றாம் பரிசாக ரூபாய் 5000-மும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.
போட்டிகளில் முதற் பரிசுப் பெற்றவர்கள் மட்டும் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். மாநிலப் போட்டித் தொடர்பானத் தகவல் பின்னர் தெரிவிக்கப்படும், என தெரிவித்துள்ளார்.