The police have identified the gang that killed a antagonism in Perambalur

வல்லத்தரசு

பெரம்பலூரில் நேற்று மாலை ஒரு கும்பல் ஒன்று விளாமுத்தூர் சாலையில் தனது நண்பர் சூர்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்த பெரம்பலூர்அமமுக நகர மாணவரணி செயலாளர் சங்கு பாண்டி (எ) வல்லத்தரசுவை, ஒரு கும்பல் ஒன்று வெட்டி சாய்த்து விட்டு தலைமறைவானது. அதில் வல்லத்தரசு உயிரிழந்தார். சூர்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து சிகிச்சை பெற்று வரும் (அதே பகுதியை சேர்ந்த) சூர்யா கொடுத்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியை சேர்ந்த பத்மநாபன் மகன் பிரகாஷ், செல்வக்குமார் மகன் விஜயராஜ், காக்க கார்த்தி, ரெங்கசாமி மகன் கஞ்சா ராஜா ஆகியோர் தனது நண்பர் சூர்யா உடன் விளையாடிக் கொண்டிருந்த சங்குபாண்டி (எ) வல்லத்தரசுவை முதலில் வாய்த்தகராறில் ஈடுபட்டனர், பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த கும்பலை சேர்ந்த பிரகாஷ் தான், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வல்லத்தரசுவின் இடுப்பில் வெட்டியுள்ளார், வல்லத்தரசு அவர்களிடம் போராடி தடுத்து விட்டு, தப்பிக்க முயன்ற போது அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் துரத்தி சென்று உடலின் பல்வேறு பகுதிகளில் வெட்டி கொலை துடிதுடிக்க கொலை செய்தனர். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானது தெரிய வந்தது.

கடந்த நாட்களுக்கு முன்பு வல்லத்தரசுவின் மணிகண்டனுக்கும், விஜயராஜிக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஒருவரை ஒருவர் அசிங்கமாக திட்டிக் கொண்டனர். அதில் கொலையுகுண்ட வல்லத்தரசு தட்டி கேட்டுள்ளார். பின்னர், சமாதானம் ஆகியுள்ளனர். அதுவே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

கொலைக் குற்றவாளிகளை போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட வல்லத்தரசுவின் சடலம், உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட ரவுடி கபிலனின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு முன்னர், நேற்று இரவு அமுமுக அரசியல் பிரமுகர் ஒருவர் 10 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரம்பலூர் நகர மக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!