The Police Idendify of the fake liquor factories: three arrests and seized goods worth Rs 10 lakh
திருச்சி , பெரம்பலூர் மதுவிலக்கு போலீசாருக்கு, பெரம்பலூர் அருகே கல்பாடி பிரிவு சாலை அடுத்து உள்ள பகுதியில், ஓர் வீட்டில், ரகசியமாக மதுபானங்கள் தயாரித்து தமிழகம் முழுவதும் வினியோகிப்பதாக வந்த கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது காரைக்கால் பகுதியை சேர்ந்த சிலர் பெரம்பலூர் – கல்பாடி பகுதியில் அசோகன் என்பவருக்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் அருகில் கங்காதரன் என்ற இருவரின் வீடுகளையும் வாடகைக்கு எடுத்து, தங்கி போலியாக மதுபானங்கள் தயாரித்து வந்தது தெரியவந்தது. மேலும், போலி மதுபானங்கள் சுமார் ரூ. 7.5 லட்சம் மதிப்பிலும், மற்றும் மூலபொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும், போலி மதுபானங்கள் தயாரித்த உமாசந்த (வயது 30), வினோத்குமார் (30), நித்தியானந்தம் (30) ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்கள் தயாரித்த போலி மதுபானங்கள் தமிழகம் முழுவதும் எங்கெங்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் தொடர்ந்து வாங்கி விற்பனை செய்தவர்கள் யார் யார் என்றும், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய ஒருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த போலி மதுபானங்களால் குடிமகன்களியே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலி மதுபான ஆலைகளின் கிளை தமிழகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது உள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முழு நெட்வொர்க்கையும் கையும் களவுமாக பிடிக்க உள்ளனர்.