The police rescued the girl in Perambalur who left the house angry because she was transferred to another school in Theni!

தேனியில், தன்னை வேறு பள்ளிக்கு மாற்றததால், பெற்றோர்களிடம் சண்டையிட்டு கோபித்துக் கொண்டு வீட்டை வெளியேறிய சிறுமியை மீட்ட பெரம்பலூர் போலீசார், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 8- ம் வகுப்பு பயிலும் மாணவி தன்னை வேறு பள்ளிக்கு மாற்றுமாறு தனது பெற்றோர்களுடன் சண்டையிட்டு அதன் காரணமாக வீட்டை விட்டு சுமார் மதியம் 2 மணிக்கு காணாமல் போனதாக, அவரின் பெற்றோர்கள் தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் காணாமல் போன சிறுமி தனது அம்மாவின் செல்போனை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் என்ற தகவலை அறிந்து செல்போன் சிக்னலை வைத்து அச்சிறுமி செல்லும் இடத்தை கண்காணித்து அருகில் உள்ள மாவட்ட போலீசாருக்கு அச்சிறுமியின் புகைப்படத்தையும் கடைசியாக அவர் அணிந்திருந்த உடையின் அடையாளத்தையும் அனுப்பி தகவல் அளித்துள்ளனர்.

அந்த சிறுமியின் செல்போன் டவர் சிக்னலை பார்த்த போது திருச்சி – சென்னை செல்லும் பேருந்தில் திருச்சியில் இருந்து புறப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட போலீசார், பெரம்பலூர் மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

நெடுஞ்சாலை ரோந்து வாகன எண் I – எஸ்.எஸ்.ஐ ரமேஷ், ஹெட் கான்ஸ்டபிள் ஸ்டாலின் ஆயுதப்படை போலீஸ் வைரமுத்து ஆகியோர்கள் மற்றும் அப்போது இரவு ரோந்து பணியில் இருந்த மகளிர் போலீஸ் இன்பெக்டர் ஹேமலதா ஆகியோர் இணைந்து திருமாந்துறை டோல்கேட்டில் அச்சிறுமியின் புகைப்படம் மற்றும் கடைசியாக அணிந்து வந்த உடையின் அடையாளங்களை வைத்துக்கொண்டு திருச்சி – சென்னை நோக்கி சென்ற பேருந்துகளில் ஏறி தணிக்கை செய்தனர்.

பஸ்சில் வந்த சிறுமியை இரவு 10.30 மணி அளவில் அடையளாம் கண்டு, மீட்டனர். பின்னர் மங்களமேடு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என எடுத்துரைத்தார். பின்னர் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து நள்ளிரவு 2.30 மணிக்கு மேற்படி சிறுமியை பத்திரமாக அவருடைய பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சிறுமியை மீட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!