பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்ட்ட சொக்கநாதபுரத்தில் உள்ள அம்மாதோப்பு குளத்தை தூர்வாரும் பணியை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக-வின் கொள்கை பரப்பு செயலாளருமான ஆ.ராஜா மண்வெட்டியால் மண்ணை அள்ளி தொடங்கி வைத்தார்.
அப்போது, மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ம.ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் வேப்பந்தட்டை நல்லத்தம்பி, வேப்பூர் மதியழகன், பெரம்பலூர் அண்ணாத்துரை மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி ப.செந்தில்நாதன், அப்துல் பாரூக், ஒஜீர், சொக்கநாதபுரம் சிதம்பரம், வழக்கறிஞர் ராஜேந்திரன், பெரம்பலூர் நகர செயலளார் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் வாலிகண்டபுரம் ரவிச்சந்திரன், மருத்துவர் அணி செ.வல்லபன்,
செஞ்சேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன், அன்னமங்கலம் செல்வக்குமார், ஏ.எம்.கே கரிகாலன், பெரம்பலூர் 7வது வார்டு கவுன்சிலர் கி. கனகராஜ், அரியலூர் மாவட்ட செயலாளர் சிவசங்கர், உள்ளிட்ட கிளை, பேரூர், ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது (திமுக தொண்டர்) ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் வரதராஜன் குளம் தூர்வாருவதற்காக ரூ. 25 ஆயிரத்தை ஆ.ராஜாவிடம் நிதியுதவி வழங்கினார்.