vck-thirumaa-mangalameduகல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பொதுப்பிரிபிவினருக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் : தொல். திருமாவளவன் பேச்சு

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு கிராமத்தில் புதுப்பிக்கப்பட்ட டாக்டர்.அம்பேத்கரின் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்த அவர் பின்னர் பேசியதாவது :

கல்வி உரிமை சட்டத்தின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பொதுப்பிரிபிவினருக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த விதி எந்த பள்ளியிலும் நடைமுறையில் இல்லை.

இதனை அரசு கண்காணித்திட அரசு எந்த முனைப்பையும் காட்டவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது. எனவே மாணவர் சேர்க்கை நடைபெறும் இந்த நேரத்தில் தமிழக அரசு கல்வி உரிமைச்சட்டப்படி பொதுப்பிரிவினருக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையில் தனியாக ஒரு குழு அமைத்து கண்காணித்திட வேண்டும்.

11ஆம் வகுப்பு சேர்க்கையின் போது முதல் மற்றும் இரண்டாம் பிரிவுகளிலும் கட்டாயம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபட வேண்டும். 1994ஆம் ஆண்டு இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது நடைமுறையில் இல்லை. இதனை தவிர்த்து எவ்வித பாரபட்ச மின்றி 11ஆம் வகுப்பு சேர்க்கையிலும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இந்தியா முழுவதும் ஒரே கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு பணியாளர்களின் பிள்ளைகள் இந்தியா முழுவதும் சமஸ்கிருதம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற முடிவை வி.சி வன்மையாக கண்டிக்கிறது.

மக்கள் நலக்கூட்டணி தொடரும்:

அனைத்து மாநிலத்திலும் தாய் மொழி கல்வி முதன்மை படுத்த வேண்டும். மக்கள் நலக்கூட்டணி தொடரும். மக்கள் நலக்கூட்டணியில் எந்த சிக்கலும் கடையாது. இந்த கூட்டணி முன் வைத்த மாற்று அரசியல் மகத்தானது, தொலைநோக்கு பார்வையுடையது, புரட்சிகரமானது. எனவே இதனை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதில் வி.சி கட்சி உறுதியாக இருக்கிறது.

தே.மு.தி.கவும், தா.ம.கவும் மக்கள் நலக்கூட்டணியோடு தொகுதி உடன்பாடு வைத்து கொண்டது. மக்கள் நலக்கூட்டணியில் ஒரு அங்கமாக இணையவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. எனவே தே.மு.தி.கவும், தா.ம.கவும் சுதந்திரமாக முடிவு எடுக்க உரிமை பெற்ற கட்சிகள். ஆனாலும் இந்த தே.மு.தி.க., தா.ம.க., ஆறு கட்சி கூட்டணி உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் தொட வேண்டும் என்பது வி.சி கட்சியின் விருப்பம்.

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அவசியம் இல்லை என்று நான் கூறியது திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு. பெரும்பாலும் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்கான எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. உடனிருக்கிற கட்சிகளை வைத்து கொண்டு தேர்தலை சந்திப்பார்கள். சில நேரங்களில் அவற்றையும் கழட்டி விட்டு தனித்தே தேர்தலை சந்திப்பார்கள் இதைத்தான் நான் இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் சுட்டி காட்டினேன்.

எனவே உள்ளாட்சி தேர்தலிலும் சரி, நாடாளுமன்ற தேர்தலிலும் சரி சட்டப்பேரவை தேர்தலை அடிப்படையாக வைத்து, எந்த முடிவையும் எடுக்க அவசியமில்லை. மக்கள் நலக்கூட்டணி தொடர வேண்டும். முன் வைத்த மாற்று அரசியல் அனைவரையும் சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும் இதுதான் வி.சி.,கட்சியின் உறுதியான நிலைப்பாடு:

சட்டப்பேரவையில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் ஏற்பட்டிருக்கிற நல்லிணக்கம். தே.மு.தி.க., தா.ம.க., மக்கள் நலக்கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி, நாங்கள் ஒரு தனி அரசியல் சக்தியாக உருப்பெறுகிற சூழலில் தான் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கமான சூழல் உருவாகியுள்ளதாக நான் நம்புகிறேன். இது தொடர வேண்டும். அவர்கள் தங்களை எதிரிகளாக கருதாமல் நல்லிணக்கத்தோடு இணைந்து அரசியல் கடைமைகள் ஆற்ற வேண்டும்.

தேர்தலின் போது அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையவாக்காளர்ளுக்கு பணம் கொடுப்பதில் ஒரு இணக்கமான நல்லுறவுஇருந்திருக்கிறது. ஆகையினால் தான் பணம் வழங்கியதை ஒருவர் ஒருவர் எதிர்க்கவில்லை. இதற்கு மக்கள் நலக்கூட்டணியின் அரசியல் சக்தி தான் என பேசினார்.

அப்போது அந்நிகழ்ச்சியில் மண்டல அமைப்பு செயலாளர் கிட்டு, மாவட்ட துணைச் செயலாளர் ந.கிருஷ்ணகுமார் உட்பட விசிக கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2021 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!