The public can apply online for applications related to Jamabandhi: Perambalur Collector Venkatapriya
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கோவிட் 19 நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம் 144ன் கீழ் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அரசாணை நிலை எண்.395, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை (வ.நி3(2))துறை, நாள்- 07.06.2021 படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1430 ஆம் பசலி (2020-2021) க்கான ஜமாபந்தி மனுக்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படமாட்டாது.
பொதுமக்கள் வருவாய் தீர்வாய(ஜமாபந்தி) தொடர்பான கோரிக்கை உரிய ஆவணங்களுடன் தாங்களே https://gdp.tn.gov.in/jamabandhi என்ற இணைய தள முகவரி வாயிலாகவோ அல்லது தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாக 10.06.2001 முதல் 31.07.2021 வரையுள்ள தேதிகளில் பதிவேற்றம் செய்து அதற்குரிய ஒப்புதல் ரசீதினை தவறாது பெற்றுக் கொள்ளலாம். பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் மீது உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு மனுதாரர்களுக்கு பதில் வழங்கப்படும்.
மேலும், கொரோனா நோய் பரவலை தடுக்கும்பொருட்டு பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்களில் மனுக்கள் அளிக்கும்போது தவறாது முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை கடைபிடித்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.