The public demand is to bring a single school curriculum across India

இந்தியா முழுவதும் சட்டம் அனைவருக்கும் சமமாக இருப்பதை போன்று நாடு முழுவதும் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசமின்றி ஒரே முறை பள்ளிக் கல்வியில் பாடத்திட்டத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இந்தியாவில், அந்தந்த மாநிலங்களின் பாடத்திட்டம் (ஸ்டேட் போர்டு), சி.பி.எஸ்.இ, கேந்திர வித்யாலாயா, நவோதயா, ஐ.சி.எஸ்.இ ராணுவப்பள்ளி, மெட்ரிக்குலேசன், இண்டர் நேசனல், மாண்டிச்சோரி, சுயசார்பு கல்வி, ஓபன் ஸ்கூல் என பல்வேறு வகையான பாடத்திட்டங்களை கொண்டு மாணவர்களுக்கு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.

இதனால், வேறு கல்வி முறை பாடத்திட்டம் கொண்ட பள்ளிக்கு மாறும் போது பெரும் சிரமம் அடைகின்றனர். அரசு நீட் போன்ற தேர்வுகளால் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம் கொண்ட பள்ளியில் பயிலும் மாணவர்கள் வெற்றி பெறும் வகையிலும், பல மாணவர்கள் பின் தங்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் ஆசிரியர்களும், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான அளவில் மாற்றிக் கொள்ள வேண்டும். இதனால் ஆசியரிர் பற்றாக்குறை ஒருபுறமும், மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்படுகிறது.

இந்திய அரசு சரியான பாடத்திட்டங்களை வகுத்து ஒரே பாடத்திட்டம் கொண்ட பள்ளிகளாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அரசியல் அமைப்பு சாசனப்படி ஏழை – எளிய குடும்பத்தை சார்ந்தவர்களும் தரமான கல்வி கிடைப்பதன் மூலம் மற்றவர்களோடு போட்டி போட முடியும், அதோடு, வேலை வாய்ப்பு, மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில், வணிகம் போன்றவற்றிலும் சீரான நிலை அனைவருக்கும் கிடைக்கும்.

மாநில வாரி மொழிப்பாடங்களை தவிர பிறப்பாடங்களை (கணிதம், அறிவியல், சமூக அறிவியல், வணிகம், பொது நிர்வாகம், கணக்கியல், வேளாண்மை, தொழில்சார் பாடங்கள் ) ஆங்கிலத்தில் கற்பிப்பதன் மூலம் உலக அளவில் போட்டி போட எளிமையாக அமையும்.

பள்ளிகளில் மக்கள் கூட்டம் முட்டி மோதுவது தடுக்கப்படுவதோடு, கல்வியின் தரம் நாடு அளவில் உயரும். நாடு முழுவதும் மாற்றலாகி செல்லும், அரசு பணியாளருமானலும் சரி, பிழைப்பை தேடி செல்லும் சாதரண குடிமகனாலும், குடும்பத்தோடு தங்கி பணி செய்யும் அப்பகுதியில் கல்வியை அந்த குடும்பத்து குழந்தைகள் பெறமுடியும்.

இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்னர், கல்வி விலை பொருளாக மாறி வருவது தடுக்கப்படும். எனவே, மத்திய மாநில அரசுகள் இணைந்து பொதுமக்களுக்கு ஒரே முறை பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!