The public fears that the cavity in the Cauvery River near Erode will cause diseases

ஈரோடு சூரம்பட்டி அணைக்கட்டில் இருந்து கழிவு நீர் நுரையாக வெளியேறி காவிரி ஆற்றில் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் சூழல் நிலவி
வருகிறது..

ஈரோடு சூரம்பட்டியில் உள்ள பெரும்பள்ளம் அணைக்கட்டு கீழ்பவானி கால்வாயில் இருந்து கசியும் நீரால் நிரம்பி வருகிறது. சூரம்பட்டியில் இருந்து 25 கி.மீ தொலைவில்
உள்ள நஞ்சை ஊத்துக்குளி வரை 2500 ஏக்கர் விளைநிலங்கள் இந்த தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகிறது.

ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு முக்கிய நிலத்தடி நீராதாரமாக இந்த அணைக்கட்டு உள்ளது. இந்நிலையில் சூரம்பட்டி சங்குநகர் போன்ற பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் கழிவு நீரானது நேரடியாக பெரும்பள்ளம் அணைக்கட்டுக்கு திருப்பி விடப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக அணைக்கட்டு நிரம்பியநிலையில், இதில் இருந்து வெளியேறும் தண்ணீர் கடும் துர்நாற்றத்துடன் நுரை பொங்கியும் பிச்சைக்காரன் பள்ளம் வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் சூரம்பட்டி பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் நிலத்தடி நீராதாரம் கழிவு நீரால் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. பெரும்பள்ளம் அணைக்கட்டில் கழிவு நீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!