The public handed over the youths who stole the amplifier of the mic set for the Pongal festival near Perambalur to the police!

பெரம்பலூர் அருகே பொங்கல் பண்டிகைக்கு, வைத்த மைக் செட்டின் ஆம்பிளிபயரை, சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்து திருடியவர்களை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்த சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் ஊராட்சிக்கு உட்படட நாவலூர் கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதற்காக அருகே இருந்த மாரியம்மன் கோவில் அருகே மைக் செட் கட்டியிருந்தனர். நேற்றிரவு இருந்த மைக் செட்டின், ஆம்பிளிபயர் இன்று காலை காணவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரு வாலிபர்கள் ஆம்பிளிபயர் எடுத்து செல்வதை பார்த்தனர். பின்னர், அவர்கள் இருவரில் ஒருவன் உள்ளூரை சேர்ந்த செந்தில் மகன் சுரேஷ் (23), மற்றொருவன் நாகராஜ் மகன் சந்துரு என்பதும் தெரிய வந்தது. அவர்களை பிடித்து சம்பவ இடத்தில் வைத்து பொதுமக்கள் விசாரணை செய்து கொண்டிருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசாரிடம், திருடிய இருவரையும் ஒப்படைக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பின்னர், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், அங்கிருந்த பொதுமக்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் மீட்டு போலீஸ் ஸ்டேசன் அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!