The public is invited to take advantage of the Drinking TWAD Water Testing Center!

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களில் நீர் பரிசோதனை மையம் இயங்கி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு குடிநீர் பரிசோதனை ஆய்வுக்கூடம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆலம்பாடி ரோடு, த.கு.வ.வாரியம் ஆய்வு மாளிகை, பெரம்பலூர்என்ற விலாசத்தில் இயங்கி வருகிறது. இதில் தண்ணீர் மக்களுக்கு குடிப்பதற்கு உகந்ததாக உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது விவசாயத்திற்கு பயன்படுத்தும் நீர், பாசனத்திற்கு பயன்படுத்தும் நீர், கோழிப்பண்ணைக்கு (வளர்ப்பு பறவைகள்) பயன்படுத்தும் நீர், நீச்சல் குளத்திற்கு பயன்படுத்தும் நீர் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள நீர் போன்றவைகளையும் பரிசோதனை செய்வதற்காக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட பயன்பாடுகளுக்கான பரிசோதனை செய்ய செலவினத் தொகை ரூ.1,000 மற்றும் அதற்குண்டான ஜி.எஸ்.டி 18 சதவீத வரியை செலவினத் தொகையாக அரசு நிர்ணயித்துள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள் குடிநீர் பரிசோதனை செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிராம குடிநீர் திட்டக் கோட்ட நிர்வாக பொறியாளரை அணுகி பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!