The public who caught the thief who broke into a house in Perambalur! another one escape !!
பெரம்பலூர் நகரில் நள்ளிரவில் கொள்ளையில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களில் ஒருவனை சுடுகாடு சுற்றுச்சுவரை தாண்டும் போது மடக்கி பிடித்தனர்.
பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள ரெங்கா நகரை சேர்ந்தவர் செல்வராஸ் (61). வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது மேல் வீட்டில் பூட்டு உடைந்து விழும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தனர். 2 பேர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது. இது குறித்த தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வரவே அவர்களும் எழுந்து வந்த நிலையில் கொள்ளையர்கள் தப்பிக்க முயன்று பக்கத்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்பகுதி மக்கள் விழித்து கொண்டு தேடுவதை அறிந்த கொள்ளையர்கள் அருகில் உள்ள சுடுகாடு சுற்றுச்சுவரை தாண்டி தப்பி செல்ல முயன்றனர். அப்போது வீட்டின் உரிமையாளர் ரெங்கசாமி அவரது மகன் பிரகாஷ் இருவரும் விரட்டி சென்று கொள்ளையர்களை மடக்கினர். அப்போது மெலிதான உடல் வாகு கொண்ட ஒருவன் தப்பிவிட்டான். பருமனாக உடல் வாகு கொண்ட ஒருவன் தப்ப சுற்றுச்சுவரை தாண்ட முடியாத நிலையில் சுவற்றில் ஏறி தாண்ட முயற்சி செய்தவனை தந்தை மகன் இருவரும் காலை கெட்டியாக பிடித்து கொண்டு சத்தம் போட்டனர். அந்த திருடனை மறுபகுதியில் இருந்த திருடனை கையை பிடித்து இழுத்தான். இருவரும் மாறி மாறி இழுத்த நிலையில், திருடனின் காலில் சேலையை இறுக்கமாக கட்டி இழுத்தனர். இதில் திருடனின் கை சுற்றுச்சுவர் வேலியில் கை மாட்டிக் கொண்டது. பின்னர் அப்பகுதியினர் போலீசார் தகவல் தெரிவித்தனர். திருடனை பிடித்த பொது மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் திருடன் லப்பைக்குடிக்காடு பகுதியை சேர்ந்த அப்துல் பாஷா (45). என்பது தெரியவந்தது. மேலும் ரூ.2500 கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பகுதிக்கும் போலீஸ் ஸ்டேசனுக்கும் சுமார் 100 மீட்டர் தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.