The PVS (Police Verification Service) was started in SP Disha Mittal in Perambalur.

தமிழக காவல் துறை சார்பில், காவல்துறை முன்நன்னடத்தை சரிபார்ப்பு சேவையை இன்று பெரம்பலூரில் போலீஸ் எஸ்.பி திஷாமித்தல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

காவல் துறை முன் நடத்தை சரிபார்ப்பு சேவை என்ற புதிய இணைய வழி சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதில், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் கட்டணம் செலுத்தி, தனிநபர் விவரம், வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு, ஆகிய தகவலை, www.eservices.tnpolice.gov.inஎன்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம்.

தனி நபருக்கு ரூ. 500-ம், தனியார் நிறுவனங்களுக்கு ரூ.1000-மும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனை கிரெடிட். டெபிட், கார்டுகள், இணைய வழி வங்கி சேவை, முறைகளில் ஏதேனும் ஒன்றின் வாயிலாக கட்டணம் செலுத்தலாம்.

இச்சேவை பெற, விவரம் சரிபார்க்க வேண்டியவரின் தற்போதைய வீட்டு முகவரி, மற்றும், தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின், அடிப்படையில், அந்த நபர் ஏதேனும், குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளாரா என்றும், இது தமிழகத்தில் வசிப்பவர் பற்றி விவரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படும், விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும், இச்சேவை பெற பொதுமக்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் காவல் நிலையங்களுக்கு நேரிடையாக செல்ல வேண்டிய அவசியமில்லை, மேலும், இணைய தளம் வழியாக விண்ணப்பித்து, அதற்கான அறிக்கையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். காவல் துறை சரிபார்ப்பு அறிக்கையில் உள்ள QR குறியீட்டினை ஸ்கேன் செய்தும், அல்லது காவல் சரிபார்ப்பு சேவையில்லுள்ள சரிபார்ப்பு என்ற பகுதியில் இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக கொள்ளலாம். PVR எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணபத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். சேவையில் குறைபாடு ஏதேனும் இருந்தால், அதுகுறித்து பின்னூட்டம் பகுதியில் தெரிவிக்கலாம்.

இந்த பின்னூட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர ஆணையர் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடடிவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விண்ணப்பத்தில் குறைபாடுகள் இருந்தால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்தார். அதற்கா கட்டணத் தொகையை திரும்ப வழங்கப்பட மாட்டாது. மேலும் தவறான விவரங்கள் அளித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!