The ration shops will continue to operate for the next 4 days: Namakkal Collector
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை ரேசன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது. வருகிற 6-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை கொண்டாடப்பட உள்ளது.
இதையொட்டி பொது மக்கள் எவ்வித சிரமமும் இன்றி அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகள் அனைத்தும் இன்று 2ம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம்போல் செயல்படும். இதற்கு ஈடாக இம்மாதம் 3வது வெள்ளிக்கிழமையான 16ம் தேதி ரேசன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் ரேசன் கார்டுகளுக்கு உரியை அத்தியாவசியப் பொருட்களைச் சிரமமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் இன்று 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் தொடர்ந்து 4 நாட்கள் அனைத்து ரேசன் கடைகளும் செயல்படும் என தெரிவித்துள்ளார்.