The real victory is when NEET is cancelled; In Perambalur, Minister Udayanidhi’s speech!

பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் பெரும்பலூரில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி தலைமையில் நடந்தது. போக் குவரத்துத் து துறை அமைச் சர் சிவசங்கர். பெரம்பலூர் மாவட்ட திமுக செயலா ளர் குன்னம் ராஜேந்திரன், எம்எல்ஏக்கள் பிரபாகரன், க.சொ.க கண்ணன் முன் னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பெரம்பலூர் அரியலூர் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சேலத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்து முதல் கட்டமாக 25 லட்சம் வழங்கியுள்ளார் நமது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அதற்கு இளைஞர் அணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நான் வந்ததின் முதல் நோக்கம் சேலம் மாநில மாநாட்டிற்கு அனைவரையும் அழைக்க வேண்டும் என்பதுதான்.

திருச்சியை நாம் வீரர்கள் கூட்டம் என்று சொல்வோம், ஆனால் அந்த வீரர்கள் கோட்டத்தின் நுழைவு வாயில் எது என்றால் பெரம்பலூர் அரியலூர் மாவட்டம் தான். இந்த அரியலூர் மாவட்டம் கலைஞரால் உருவாக்கப்பட்டது. பெரம்பலூர் அரியலூர் இரண்டு மாவட்டத்திற்கு மே மிகப்பெரிய வரலாறு உண்டு. பொதுவாக இந்த பகுதியை வறண்ட பகுதி என சொல்லுவார்கள். நம் கொள்கை பொறுத்தவரை மிக செழிப்பான பகுதி இந்த மாவட்டங்கள்.
இந்த கூட்டத்திற்கு பெயர் செயல் வீரர்கள் கூட்டம். செயல் வீரன் என்றால் என்ன? தலைவர் என்ன சொல்றாரோ தலைமை என்ன கட்டளை இடுதோ அதை முதலில் களத்தில் இறங்கி செய்து முடிப்பவன் தான் செயல் வீரன். சுயநலம் பார்க்காமல் தன்னலம் பார்க்காமல் பொதுநலத்திற்காக மக்கள் நலத்திற்காக களதில் இறங்கி போராடி ஜெயிச்சு காட்றவன் தான் உண்மையான செயல் வீரன். அப்படி பார்த்தால் இந்த மேடையில் முதன்மையான செயல் வீரன் அண்ணன் ராஜா அவர்கள் தான் முதன்மையான செயல் வீரன். நம்முடைய அண்ணன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்தான் உண்மையான செயல் வீரன். அதேபோல அண்ணன் குன்னம் ராஜேந்திரனும் செயல் வீரன். இந்த கூட்டத்திலே உண்மையாக உணர்ச்சியோடு கலந்து கொண்டிருக்கிற நீங்கள் அனைவரும் ஒவ்வொருவரும் செயல்வீரன். திமுகவிலேயே 22 அணிகள் உள்ளன. அதில் களத்தில் இறங்கி வேலை செய்வது இளைஞர் அணி தான்.
1980 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முன்மாதிரியாக இளைஞர் அணி ஒரு கட்சிக்கு துவக்கப்பட்டது என்றால் அது திமுக தான். பிறகு தான் மற்ற இயக்கங்களில் இளைஞர் அணி துவங்கினார்கள். முதல் மாநில மாநாடு 2007 ஆம் ஆண்டு நெல்லையில் நடந்தது. இப்போது வருகிற டிசம்பர் 13ஆம் தேதி சேலத்தில் நடக்கப்போகிறது. நீங்க அத்தனை பேரும் மாநாட்டுக்கு வந்து மிகப்பெரிய வெற்றி மாநாடாக மாற்றி காட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அண்ணன் ஆ ராசாவின் போர் குணமும் கொள்கை உறுதியும் இந்திய நாட்டுக்கே தெரியும். எதையும் ஆணித்தரமாக ஆதாரபூர்வமாக வாதிடுபவர். திராவிட கொள்கை உடைய இன்றைய தலைமுறைக்கான இளம் ஆசிரியர் நமது அண்ணன் ஆ ராசா தான். இளைஞர் அணிக்கு அதிக உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பதற்கும் நிறைய பொறுப்புகள் வழங்க வேண்டும் என்பதற்கும் இந்த மாவட்டம் வழங்கி உள்ளது 234 தொகுதிகளிலும் தலைவர் கட்டளையின் பேரில் பேராசிரியர் நூற்றாண்டை முன்னிட்டு பயிற்சி பாசறை நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கு தலைவர் பொதுக்குழுவில் பாராட்டு தெரிவித்தார். உள்ளாட்சித் தேர்தலிலும் கழக அமைப்பு தேர்தல்களிலும் இளைஞர் அணிக்கு அதிக அளவில் பிரதிநிதித்துவம் கொடுத்தது நமது தலைவர் தான். கழகத்தில் உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு இந்த இளைஞர் அணியை சாட்சி.

நமது தலைவர் ஒட்டுமொத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், யார் காலிலேயும் விழுந்து முதலமைச்சர் ஆகவில்லை, தலைவரின் உழைப்பில் 20 சதவீதம் தொலைத்தால் போதும். நாம் என்ன சாதனை வேண்டுமானாலும் செய்யலாம். உழைத்தால் வெற்றி உறுதி என்பதற்கு உதாரணமாக உட்கார்ந்திருப்பவர் தான் அண்ணன் ஆ ராசா அவர்கள்‌. அடிப்படை உறுப்பினராக தொடங்கி 35 வயதில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். அண்ணன் சிவசங்கர் அவர்களும் இப்படித்தான். இளம் வயதிலேயே மாவட்ட செயலாளராகி இன்று போக்குவரத்து துறை அமைச்சராகி உள்ளார். குன்னம் ராஜேந்திரன் அவர்களும் ஒன்றிய செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றி மாவட்ட செயலாளராக இருக்கிறார்.

அமைப்பாளர் துணை அமைப்பாளர்களுக்கு சின்ன வேண்டுகோள் உங்களுக்கு மினிட் புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது. நிறைய கழக நிகழ்ச்சிகள் நடத்துங்கள், அதில் பதிவு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி மினிட் புக்கை ஒழுங்காக பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நான் சொன்னதை செய்வதற்காக முழுமூச்சியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறேன். நீட் தேர்வு ரத்து, என்னை தான் பலர் விமர்சிக்கிறார்கள். ஆமாம் நான் சொன்னது உண்மைதான். ரத்து செய்யும் முழு முயற்சியில் நான் போராடிக் கொண்டிருக்கிறேன். என்று நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறது அன்றுதான் உண்மையான வெற்றி.

அரியலூர் மாவட்டத்தில் தொடங்கிய அந்த தற்கொலை தங்கை அனிதா இந்த நீட் தேர்வு எப்படி தமிழ்நாட்டுக்குள் வந்தது. நுழைவு தேர்வை முதன்முதலாக ரத்து செய்தது கலைஞர் அவர்கள். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் போதும் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்று கிராமப்புறங்களில் இருந்து ஏழை எளிய மாணவர்கள் மருத்துவராக வேண்டும் என கலைஞர் மளிகை தேர்வை ரத்து செய்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் இருக்கும்பொழுது நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கவில்லை. அந்த அம்மா இறந்த பிறகு ஆட்சி செய்து கொண்டிருந்த அடிமைகள் பாஜகவிற்கு பயந்து நீட் தேர்வை தமிழ்நாட்டிற்கு நுழைத்தார்கள். அப்போது ஆரம்பித்தது இந்த தற்கொலைகள். இந்த ஆறு வருடத்தில் மட்டும் 21 குழந்தைகள் தற்கொலை செய்துள்ளனர். அனிதா ல ஆரம்பித்து பத்து நாட்களுக்கு முன்பு சென்னையில குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஷ் என்ற மாணவன் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டார்.

இதை தற்கொலை என்று கூட சொல்ல முடியாது ஒன்றிய பாஜக அரசு செய்த கொலை என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு துணை நின்றது அடிமை அதிமுக. ஜெகதீஷ் இறந்த பிறகு துக்கம் தாளாமல் அவரது தந்தையாரும் இறந்து விட்டார். நீட் தேர்வு ரத்தாகும் வரை நம்முடைய அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும். ஒரு உதயநிதியால் நீட் தேர்வு ரத்தாகாது. இங்க இருக்கிறவர்கள் அனைவரும் உதயநிதியாக மாறி போராட்ட களத்திற்கு வந்து நீட் தேர்விற்கு முடிவு கட்டி ஆக வேண்டும். நியாயமாக அதிமுக தான் போராடி இருக்க வேண்டும். அவர்கள் தான் அன்று எதிர்க்கட்சி. இந்தியாவிலேயே சிறப்பாக செயல்பட்டு வரும் காலை உணவு திட்டத்தை அனைத்து முதலமைச்சர்களும் பாராட்டுகிறார்கள், என பேசினார். முன்னதாக பெரம்பலூர் இளைஞரணி அமைப்பாளர் ஹரி பாஸ்கர் வரவேற்றா. அரியலூர் மாவட்ட இளைஞரணி தெய்வ இளையராஜா நன்றி கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மாநில நிர்வாகிகள், பொறியாளர் ப. பரமேஷ்குமார், டாக்டர் வல்லபன், துரைசாமி, பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுச்செல்வி ராஜேந்திரன், அழகு. நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை சி.பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வேப்பந்தட்டை நல்லத்தம்பி ஜெகதீசன், மதியழகன், ராஜேந்திரன், சோமு.மதியழகன் மற்றும் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, வேப்பூர் பிரபாசெல்லப்பிள்ளை, வேப்பந்தட்டை ராமலிங்கம், பேரூராட்சி தலைவர்கள் லெப்பைக்குடிக்காடு ஜாகீர்உசேன், குரும்பலூர் ஆர்.சங்கீதாரமேஷ், அரும்பாவூர் வள்ளியம்மை ரவிச்சந்திரன், பூலாம்பாடி பாக்கியலட்சுமி செங்குட்டுவன், உள்பட கூட்டத்தில், மாநில மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக நிர்வாகிகள், இளைஞர் அணியினர் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!