The request to appoint a priest to the Namakkal Veera Anjaneyar temple

நாமக்கல் ஆன்மிக இந்து சமயப் பேரவை கவுரவத் தலைவர் ஏகாம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் கிழக்குப் புறத்தில் அருள்மிகு ரங்கநாயகி தாயார் உடனுறை ரங்கநாதர் கோயில் உள்ளது. ரங்கநாதர் கோயில் அடிவாரத்தில் படிவாசல் அருகே ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், இந்தக் கோயிலுக்கு தனியாக அர்ச்சகர் நியமிக்காததால், அதிகாலையில் இக்கோயிலில் தீபாராதனை செய்யும் அர்ச்சகர் கோயில் மூலவர் அறையைப் பூட்டிவிட்டு சென்று விடுகிறார்.

இதனால், ஸ்ரீவீர ஆஞ்சநேயரை தரிசித்து வழிபட வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியான செவ்வாய்க்கிழமை அன்றும் இக்கோயிலின் நடை பூட்டப்பட்டிருந்தது. அறநிலையத்துறையின் இந்த செயல் பக்தர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

எனவே ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு தனியாக அர்ச்சகர்களை நியமித்து குறிப்பிட்ட நேரங்களில் கோயிலை முழுமையாகத் திறந்து வைத்து பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கோயிலுக்கு அர்ச்சகரை நியமிக்க அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!