The revenue department officer, who was hit by a Toll plaza Security near Perambalur, expressed regret
பெரம்பலூர் அருகே திருமாந்துறை சுங்கச்சாவடியில் நேற்றிரவு ஏற்பட்ட வாக்குவாத்தில் சுங்கச்சாவடி பாதுகாவலரை தாக்கிய வருவாய் துறை அதிகாரி மன்னிப்பு கோரியால் அமைதி திரும்பியது.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை உள்ளது. அங்கு திருச்சி – சென்னையில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடியில் நேற்றிரவு சென்னையை சேர்ந்த அரசு கேபிள் நிறுவனத்தை சேர்ந்த உயர் அதிகாரி வந்துள்ளார். அப்போது அரசு விதிமுறைப்படி சுங்கச் சாவடியை கடக்க முயன்ற போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அவரை குறித்து விசாரித்து உள்ளனர். அந்த அதிகாரி சென்னை சென்று விட்டார்.
சற்று நேரத்திற்கு தொலைபேசியில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் துறையினரை போனில் தொடர்பு கொண்டு இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு உடனே புறப்பட்டு சென்ற வேப்பநதட்டை, வேப்பூர் வட்ட வருவாய் துறையினர் சுங்கச்சாவடியில் பணியிருந்து காசிநாதன் என்ற பாதுகாவலரிடம் விசாரித்து உள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் காசிநாதனை வருவாய் துறையினர் சேர்ந்தவர் ஓர் அறை விட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் ஒன்று திரண்ட சுங்கச் சாவடி ஊழியர்கள் ஆதரவளிக்காத நிர்வாகத்தை கண்டித்தும், வருவாய் துறையினரின் அத்து மீறலை கண்டித்தும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை சுங்க கட்டணம் வசூலிக்க மறுத்தனர். இதனால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் கட்டணமின்றி பயணித்தன.
இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சு நடத்தினர். பின்னர் வருவாய் துறையை சேர்ந்த அதிகாரி வருத்தம் தெரிவித்தன் பேரில் கலைந்து சென்றனர்.