The Road Staff Association demanded support for the People’s Meeting Campaign
பெரம்பலூர்: தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீன் 10 முதல் 23 வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.
அதையொட்டி 20.6.2017 அன்று பெரம்பலூர் மாவட்டத்தில் காலை 9 மணிக்கு அரும்பாவூரில் தொடங்கி, கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை வழியாக பெரம்பலூர் புதிய பழைய பேருந்து நியைங்களில் பிரச்சாரம் மேற் கொண்டனர்.
மாவட்ட தலைவர் பி.முத்து, வரவேற்றார்.. மாநில துணைத்தலைவர் சிங்கராயன், மாநில செயலாளர் மகேந்திரன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில தலைவர் எ.அம்சராஜ் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சி.சுப்ரமணி,இணைச் செயலாளர் எம்.கருணாநிதி, பொருளாளர் பி.சுப்ரமணி, அரசு ஊழியர் இணைசெயலாளர் தமிழ்மணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நெடுஞ்சாலைச் துறை தனியார்மயம், பராமரிப்பு பணிகள் தனியார்மயம், நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்கவரிக்கொள்ளை, நிதிஇல்லை என்று சொல்லும் தமிழகஅரசு தனியாருக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வாரி வழங்குகிறது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது.