The robbers who showcased their homes despite the protection of gunmen in Perambalur!

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் மர்ம கொலைகள், ஆதாயக் கொலைகள், கொள்ளைகள் அதிகாித்த வண்ணம் உள்ளது. மேலும், பல கொள்ளை வழக்குகளில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் இருந்து வருகின்றனர். போலீசாருக்கு கைகொடுக்கும் ஒரே ஆயுதம் சி.சி.டிவி கேமராஈ செல்போன் சிக்னல்கள், இதை வைத்தான் தற்போதைய இளம் போலீசார் குற்றாவாளிகளை அடையாளம் கண்டு வருகின்றனர். ஆனால், கடந்த காலங்களில், செல்போன் சிக்னல்கள், சிசிடிவி கேமராக்கள் , சோஷியல் மீடியா இல்லாத காலத்தில் போலீசார் கொள்ளையர்கள், கொலைக் குற்றவாளிகள் விட்டும் தடயங்கள், அடையாளங்களை வைத்தே குற்றவாளிகளை அடையாளம் திறன் பெற்றிருந்தனர். ஆனால் அது தற்போது போலீசாரிடம் இல்லை. மேலும், கொள்ளையடிக்க வரும் திருடர்கள் சிசிடிவி கேமராவிற்கும் கருப்பு மை அடித்தும், காட்சிகள் பதிவாகும் டிவிஆரையும் கையோடு எடுத்து சென்று விடுகின்றனர்.

கள்வன் பெரிதா! காவலன் பெரிதா என்றால் தற்போது கள்வர்களே நல்ல அப்டேட்டில் உள்ளனர். வடிவேலு பட பாணியில், அண்ணனின் 100வது திருட்டு என்பது போல, திருடும் வீட்டிலேயே பட்டாசு வெடித்து கொண்டாடி கொள்ளையடிக்கும் அளவிற்கு தைரியத்துடன் முன்னேறி உள்ளனர். இதனால், பொது மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகிய நிலையில் , பொதுமக்களை சமாதானப் படுத்துவதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசாரை முக்கிய இடங்களில் நிறுத்தி நம்பிக்கை அளித்தனர். ஆனால், அது ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை, நேற்றிரவு, போலீசார் துப்பாக்கியுடன் வலம் வந்து பாதுகாப்பு அளித்த நிலையிலும், போலீசாரின் கண்ணில் படாமல், திருடர்கள் பெரம்பலூர் பாரதி நகர் வீட்டில் தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர்.

பெரம்பலூர் பாரதி நகரை சேர்ந்தவர் பானுமதி (55), கணவர் இறந்து விட்டார். இவருக்கு ரஞ்சிதா (32) என்ற மகளும், செல்வம் (29) மகனும் உள்ளனர். கடந்த 2 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மகள் திருமணம் ஆகி சென்னையிலும், மகன் தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து கொண்டு கரூரில் உள்ளார்.

பானுமதி கடந்த 16ம் தேதி மதியம் சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக சென்று விட்டு இன்று காலை 05:30 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு இல்லாமல் தாழ்ப்பாளபோட்டு கதவு மூடிய நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் வைத்திருந்த நகை 7 பவுன் மற்றும், பீரோவில் இருந்த பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் வியூகங்களை மாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளிடம் கொள்ளையர்களை கண்டுபிடிப்பது எப்படி? என்பதை கற்றுக் கொள்ளவேண்டும் என்பதோடு, மேலும், அரசு நிதிச்சுமையை காரணம் காட்டாமல், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் போலீசார், கூடுதல் காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!