The rowdy who came for treatment in Perambalur was arrested!
பெரம்பலூர் நகராட்சி திருநகர் பகுதியில் சேர்ந்தவன் பழனிச்சாமி மகன் அய்யனார்(24). இவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி,, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று இரவு வழுக்கி விழுந்து, கால் முறிவு ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக வந்திருந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த, பெரம்பலூர் போலீசார், மருத்துவமனைக்கு சென்று அய்யனாரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவன் முன்னுக்குப் பின் முரணாக பேசியதோடு, சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து, அதனை பறிமுதல் செய்ததோடு, அரும்பாவூர் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கருணாகரன் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிகிச்சைக்காக நீதிமன்ற காவலில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.