The ruling party and opposition councilors protest against the Perambalur Municipal Commissioner!

பெரம்பலூர் நகராட்சியின் கூட்டம் இன்று தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் ராமர் திறமையின்மை காரணமாக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை மரியாதை குறைவாக நடத்துவதோடு மேலும் பெண் ஊழியர்களிடம் தரக் குறைவாக பேசுவதாகவும், கட்டிட அனுமதி, வரிவிதிப்புகளுக்கு, மிக அதிகமாக லஞ்சம் கேட்பதாக எனபொதுமக்கள் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். ஆனால் நகராட்சி ஆணையர் எதையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக என தெரிவித்த கவுன்சிலர்கள் இன்று நடந்த நகராட்சி கூட்டத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த திமுக, விசிக அதிமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் இன்று கமிஷனர் கூட்டத்திற்கு வரவேண்டும் என கோசமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கமிஷனர் ராமர் கூட்டத்திற்கு வரும் வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து கோஷமிட்டு ஆணையருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கவுன்சிலர்கள் ஷஹர் பானு சுசீலா செந்தில்குமார் ராகவி சந்திரலேகா சேகர் சௌமியா ஷாலினி தங்க சண்முகசுந்தரம் ஜெயப்பிரியா மணிவாசகம் சித்ரா சிவகுமார் தனமணி அதிமுக கவுன்சிலர்கள் பழனிசாமி லட்சுமி உள்ளிட்ட பலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!