The sand, the water shortage problem of the clean india of the personal toilet scheme to sleep

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்ட தனிநபர் இல்ல கழிப்றை திட்டம் தற்போது மோடி ஆட்சிக்கு வந்த உடன் தூய்மை இந்தியா திட்டம் என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டு 12 ஆயிரம் மானியத்துடன் கொண்டு வரப்பட்டது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி மற்றும் மணல் விலை உயர்வை காரணம் காட்டி தூய்மை இந்தியா இயக்கத்தின் சார்பில் நடந்து தனிநபர் கழிப்பறைத்திட்டம் தொடர்ந்து பல மாதங்காளாக தூங்கி வருகிறது.

ஒரு பக்கம் விழிப்புணர்வு செய்யப்பட்டாலும், மறுபக்கம் அதே அளவிற்கு மணல் விலை உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு காரணம் காட்டி கிடப்பில் கிடக்கிறது. மேலும், கழிப்பறை பணிகளுக்காக ஆங்காங்கே கொண்டு சென்று வைக்கப்பட்ட ஹலோ பிளாக் கற்கள், கழிப்பறை வளையங்கள், கோப்பைகள் , சிமண்ட் மூட்டைகள், கதவுகள் வெயில் மழையில் வீணாகி வருகின்றன.

மேலும் , ரூ.12 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் கழிப்பறைகாளல் நிலத்தடி நீர் மட்டத்துடன் கலந்து ஆழ்குழாய் நீருடன் கலக்கும் வாய்ப்பு உள்ளதால், ரூ. 30 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் சுற்றுச் சூழல் மேம்பாட்டு சுகாதார கழிவறையோ அல்லது கோவை போன்ற நகரங்களில் கண்டுபிடித்துள்ள எரிவாயு எடுக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு மேலும் பயன் உள்ளதாக இருக்கும்.

தற்போது விலை உயர்ந்துள்ள மணல் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தூய்மை இந்தியா திட்டம் செம்மையாக தூங்கி வழிகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!