The second phase of the AIADMK party in Perambalur district is Rs. 40 lakh relief materials were sent.
பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொருட்டு பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் ஏற்கனவே முதற்கட்டமாக ரூ. 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாவட்ட செயலாளரும், குன்னம் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தனது சொந்த நிதி ரூ. 2 லட்சத்திற்கான காசோலையை பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவிடம் வழங்கினார். மேலும் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமியிடம் ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக மாவட்ட அதிமுக சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொருட்டு ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் லாரி மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியை எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், சிவப்பிரகாசம், சுரேஷ், மாநில மீனவரணி இணை செயலாளர் தேவராஜன், மாவட்ட நிர்வாகிகள் ராணி, ராஜாராம், வீரபாண்டியன், ராஜேஸ்வரி, லெட்சுமி, குரும்பலூர் பேரூர் செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.