வரத்து அதிகரிப்பால், சென்னையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. சென்னையில் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த அதிகப்படியான மழையால் தக்காளி செடிகள் அழிந்து விட்டதை தொடர்ந்து ஒரே நேரத்தில் விவசாயிகள் தக்காளி செடியை அதிக்கப்படியாக நடவு செய்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது வரத்து அதிகமாகியுள்ளது. இதனால் தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 7 ரூபாயாக உள்ளது.
அங்கிருந்து கோயம்பேடுக்கு நாள்தோறும் 25 லோடு தக்காளி வந்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது அது 40 லோடுகளாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோயம்பட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி 9 ரூபாய்கு விற்கப்படுகிறது.