The sit-state college students seeking to open the building veppantattai

பெரம்பலூர் : வேப்பந்தட்டை அரசு கல்லூரிக்கான கட்டிடப்பணிகள் நிறைவடைந்தும் திறக்கப்படாமல் உள்ளதை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் தமிழகஅரசு உத்தரவுப்படி 2014- 2015ம் கல்வியாண்டு முதல் அரசுக் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பிஏ தமிழ், பிஏ ஆங்கிலம், பிகாம் வணிகவியல், பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி கணினிஅறிவியல் ஆகிய ஆங்கிலவழிக் கல்விமுறையிலான 5வகுப்புகளைக் கொண்டு கல்லூரி இயங்கி வருகிறது.

கடந்த 2ஆண்டுகளாக தாலுகா அலுவலகத்தில் பாதிவகுப்புகளும், யூனியன் அலுவலகத்தில் பாதிவகுப்புகளுமே இயங்கிவருவது. பட்டா, சிட்டாவெனப் பரபரப்பாக இயங்கிவரும் தாலுக்கா அலுவலகத்தில்தான் பட்டம் பெறவுள்ள மாணவ, மாணவியர் பாடம்படித்து வருகின்றனர்.

தரைத்தளமும், முதல் தளமும் தாலுக்கா அலுவலகப் பணிகள் நடக்கும்போது, 2வது தளத்தில்தான் 2 துறைகளைச் சேர்ந்த 4வகுப்புகள் இயங்கி வருகிறது. பழைய யூனியன்அலுவலகத்தில் 2 துறைகளைச் சேர்ந்த 4வகுப்புகளும், அதன்பின்புறமுள்ள வட்டாரஅளவிலான பாரத் நிர்மான் ராஜீவ்காந்தி சேவா கேந்திரா கட்டிடத்தில் 1 துறையைச் சேர்ந்த 2வகுப்புகளும் இயங்கி வருகிறது.

இடநெருக்கடியில் தவிக்கும் காரணத்தால் வேப்பந்தட்டை அரசுக் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளையே விதிகளுக்குப் புறம்பாக பெஞ்சுக்கு 3 பேர்களைக் கொண்டு தேர்வெழுதும் அவலநிலைதான் உள்ளது.

பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் கல்லூரிக்கான சொந்தக்கட்டிடம் ரூ12கோடியில் கட்டப்பட்டு வரு. இந்தக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும் ஆறு மாத காலமாகியும், புதியக்கட்டிடத்தில் கல்லூரி வகுப்புகள் நடத்தப்படாமல், யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலங்களில் இட நெருக்கடி மட்டுமல்லாமல் அடிப்படை வசதிகள் இல்லாமல் வகுப்புகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது.

மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் கட்டுமான பணிகள் முடிவுற்ற கட்டிடத்தை திறக்க பல முறை வலியுறுத்தியும், புதிய கட்டிடத்தை திறக்காமல் கால தாமதம் செய்வதை கண்டித்து இன்று 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!