The southwest monsoon: a review meeting on precautionary measures
பெரம்பலூர் : தென்மேற்குப் பருவமழை தொடர்பாக மேற்க்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில், ஆட்சியர் வே.சாந்தா, தலைமையில் இன்று நடைபெற்றது
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ளதை அடுத்து, தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திட ஏதுவாக பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப்பகுதியிலும் உள்ள சமுதாயக்கூடங்கள், பள்ளிக்கட்டடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என பொதுமக்கள் தங்குதற்கு தேவையான வசதிகள் கொண்ட கட்டடங்கள் தேர;வுசெய்யப்பட்டு தயார; நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவு தானிய சேமிப்புக் கிடங்குளில் தேவையான அளவு உணவுப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளா;ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து குளங்கள், கண்மாய்கள், நீh;வரத்துக் கால்வாய்கள் தூh;வாறப்பட்டு சீரமைக்க வேண்டும்
மேலும் பொதுமக்கள் அனைவரும் தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்கள் குறித்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.